districts

img

சின்னாபின்னமான ஆவடி அயப்பாக்கம் சாலை: மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துமா?

அம்பத்தூர், மார்ச் 4- அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கத்தில் இருந்து ஆவடி செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக மாறி, சாலையின் பெரும்பாலான இடங்களில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து சின்னாபின்னமாகி உள்ளன. அயப்பாக்கம், கோணாம் பேடு, ஐசிஎப் காலனி, எழில்  நகர், ராஜலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதியில் சுமார்  1000கும் மேற்பட்ட குடும் பங்கள் வசிக்கின்றன. அதே போல் ஆவடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, காமரா ஜர் நகர், ஜெ.பி. எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அத்திப்பட்டு, ஐசிஎப் காலனி, அயப்பாக்கம் பகுதி யில் இருந்து ஆவடி, திரு நின்றவூர், திருவள்ளூர் செல் பவர்களும், திருநின்றகூர், பட்டாபிராம், ஆவடி ஆகிய பகுதியில் உள்ளவர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை அண்ணாநகர் செல்ல வேண்டும் என்றால் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த சாலையில் தனியார் பொறி யியல் கல்லூரியும், பள்ளிக ளும் உள்ளன. இந்த சாலையில் ஏறக் குறைய 3 கி.மீ. வரை  சாலையின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் பழுத டைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலை யில் பெரும்பாலான இடங்க ளில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளதால் வாகனங்கள் செல்லும் போது தூசி மண்டலமாக மாறிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பாத சாரிகளும் பாதிப்புக்குள்ளா கின்றனர். சிறு மழை பெய்தால் கூட சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம் உள்ளது.மேலும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்   சாலையில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட மேயர், துணை மேயர்,  ஆவடி மாநகராட்சி நிர்வா கம் முறையான மழைநீர் வடிகால்வாய் அமைத்து மழை நீரை அயப்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்ல நட வடிக்கை எடுக்க வேண்டும். தரமான சாலை அமைத்து எரியாமல் உள்ள மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்பதே மக்க ளின் கோரிக்கையாக உள்ளது.

;