பொன்னேரி,ஆக.12-
மீஞ்சூர் அடுத்த அத்திப் பட்டு புதுநகரில் வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டு மூன்று அலகு களில் தலா 500 விழுக்காடு மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டு வரப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளி யன்று இரவு இங்குள்ள 1வது அலகில் ஜெனரேட் டர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. டர்பனில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதை யடுத்து தீயை கட்டுப் படுத்தும் பணியில் அனல் மின் நிலைய தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
தீ விபத்து காரணமாக 1வது அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அலகில் மறுசீரமைப்பு பணிகள் முடித்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்க 1 மாதம் வரை ஆகலாம் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.