districts

img

டி.ஆர்.பாலுக்கு தா.மோ.அன்பரசன் வாக்கு சேகரிப்பு

திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு, குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொல்லச்சேரி, சிக்கராயபுரம், கொழுமணிவாக்கம், மலையம்பாக்கம், சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், பழந்தண்டலம், எருமையூர், வரதராஜபுரம், நடுவீரப்பட்டு, சோமங்கலம், பூந்தண்டலம்,அமரம்பேடு, சேத்துப்பட்டு, மலைப்பட்டு, மணிமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் உற்சாக வரவேற்பு ஆதரவளித்தனர். இந்த வாக்கு சேகரிப்பில் திமுக ஒன்றிய செயலாளர் படப்பை ஆ.மனோகரன், சிபிஐஎம் குன்றத்தூர் வட்டச் செயலாளர் க.புருஷோத்தமன், வட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.சுகுமார், எஸ்.விஜயகுமார், கிளைச் செயலாளர்கள் எம்.மோகனன், ரமேஷ்பாபு, வி.சங்கர் உள்ளிட்ட  கூட்டணி கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.