districts

அன்பை வெளிப்படுத்த உதவும் தொழில்நுட்பம்

சென்னை, ஆக.9-

     தொழில்நுட்பத்தின் மூலம்  அன்பை வெளிப்படுத்த ஸ்மார்ட் போன்கள் நமக்கு எப்படி உறுதுணையாக இருக்கிறது என்பது குறித்து  விவோ நிறுவனம் ‘மகிழ்ச்சி யுடன் வாழுங்கள்’ என்னும் தலைப்பில் புதிய விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது.

     இரண்டரை நிமிடம் ஓடும் இந்த வீடியோ, நமது குடும்பத்தி னர் மற்றும் விருப்பமானவர்களுடன் நாம் இணைவதற்கு விவோ எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்குகிறது. மக்கள்  தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்யவும், வாழ்க்கையில் அந்த பொன்னான தருணங்களை நினைத்துப் பார்க்கவும் விவோ ஊக்குவிக்கிறது என்று  அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இந்த விளம்பரத்தை எப்சிபி இந்தியாவின் விருது பெற்ற இயக்குநர் நீரஜ் கைவான் தயாரித்துள்ளார்.