districts

ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரம்: சிபிஐ அறிக்கை

சென்னை,ஏப்.9- கடந்த  2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆசிரியர் பணி நியமனம் பெற்றவர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று முந்தைய ஆட்சியில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இலவச கட்டாயக் கல்வி சட்டப்படி ஒன்றிய அரசு தகுதித் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. இத்தகுதி தேர்வு எழுத, கால அவகாசம் கோரிய ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பது நியாயமற்றது என்றும் மாநில அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வலியுறுத்தியிருக்கிறார்.