தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (ஜன.14) மதுரவாயல் பகுதி, முகப்பேரில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சென்னை மக்கள் மேடை ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார், பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் வி.தாமஸ், கே.ரமேஷ், தமுமுக பொருளாளர் முகமது சர்புதீன், மாதர் சங்க தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, பகுதித் தலைவர் எஸ்.பிச்சையம்மாள், எஸ்.சித்ரா உள்ளிட்டோர் பேசினர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சைதாப்பேட்டை பகுதி, பன்னீர் செல்வம் நகர் கிளை சார்பல் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர ம.சித்ரகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர், வாலிபர், கட்டுமான சங்கங்கள் சார்பில் சனிக்கிழமையன்று (ஜன.15) மதுரவாயல் பகுதி, ராஜிவ்காந்தி நகரில் சமத்துவப்பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர்கள் எஸ்.சரவணசெல்வி( மாதர் சங்கம்), தீ.சந்துரு (வாலிபர் சங்கம்), பிச்சையம்மாள், ரமேஷ், பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ராயபுரம் பகுதி, 48ஆவது வட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிபிஎம் பகுதி செயலாளர் எஸ்.பாவனி, சுகைப், செல்வம், பாப்பு, சரோஜா, லலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.