districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னை, ஜன.21- ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ ஜனவரி 22 இன்று காலை 11 மணிக்கு வெளியிட உள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளி யிடப்பட்ட ஒருங்கிணைந்த வரைவு வாக்கா ளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப் படையில், தரவுத்தளத்தைப் புதுப்பித்தல் மற்றும் இணைக்கப்பட்ட வாக்காளர்களை யும் சேர்த்து துணை வாக்காளர் பட்டியல் அச்சிடுதல் ஆகியவை ஜனவரி மாத தொடக்கத்தில் நிறைவடைந்தன.

 புகைப்பட வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024-ஜனவரி 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

 கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப் பட்ட ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 6.11 கோடிக் கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.