districts

img

பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிக்கும் தனிநபர்கள்: மீட்டுத்தர வட்டாட்சியரிடம் தீ.ஒ.மு வலியுறுத்தல்

மதுராந்தகம், அக். 13- ஆத்தூர் கிராமத்தில் பஞ்சமி நிலத்தை ஆக்கிர மிக்கும் தனி நபர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுத் தர வலியுறுத்தி தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் சார்பில் மதுராந்தகம் வட்டாட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம்,  மதுராந்தகம் வட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் ஆத்தூர் கிராமத்தில் தலித் மக்களின் வாழ்வாதா ரத்திற்கு நிபந்தனை பட்டா வுடன் சுமார் 65 ஏக்கர் நிலம்  வழங்கப்பட்டது. தற்போது இந்த நிலம் பல உட்பிரிவு களாக பிரிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்து, வருவாய் துறை ஆவணங் களில் தவறுதலாக பட்டா  மாற்றம் செய்யப்பட்டுள் ளது. தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி  நிலத்தை ஆக்கிரமிப்பி லிருந்து அகற்றி கிராமத்தில் உள்ள 212 தலித் குடும்பங்களுக்கு மறு ஒப்படைப்பு செய்ய வலியுறுத்தி கடந்த 2015ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நில மீட்பு போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து  நடைபெற்ற வட்டாட்சிய ருடனான பேச்சுவார்த் தையில் நிலத்தை மீட்டு  தலித் மக்களுக்கு வழங்கிட  நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோட்டாட் சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இருந்த போதிலும் இன்று வரை  பஞ்சமி நிலம் தலித் மக்க ளுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதியரசர் சுனில் அரோரா இந்நிலத்தில் விசாரணை முடியும் வரை யாரும் பிரவேசிக்க கூடாது என்று உத்தரவிட்டார். இந்நிலையில் சிலர் கிரின்வெஷ் புரமோட்டர்ஸ் என்ற தனியார் நிறுவனத்து டன் இணைந்து பஞ்சமி நிலத்தை அளந்து சுற்றுச் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உட னடியாக பஞ்சமி நிலத்தை மீட்டு ஆத்தூர் தலித் மக்களிடம் மறு ஒப்படைப்பு செய்திட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலி யுறுத்தியுள்ளது. மேலும்  மதுராந்தகம் வட்டாட்சியரி டம் கிராம தலித் மக்களுடன் இணைந்து கோரிக்கை மனுக்களை வழங்கி உள்ளனர். தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் மாவட்டச் செயலாளர் க.புருசோத் தமன், விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் வி.சசிக்குமார், நில உரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ருக்மாங்கதன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் அப்போது உடனிருந்தனர்.