திருநின்றவூர், மே 18-
ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிக ளில் தொடர்ந்து மின்வெட்டு நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்க முடியாமல் அவதிப்படு கின்றனர். பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் இருளில் தவித்தனர். ஒரு மணிநேரம் முதல் 2 மணி நேரம் மின்தடைக்கு பின்னர் மீண்டும் மின் விநியோகம் சீரானது. பட்டாபிராம், மேற்கு கோபாலபுரம் பகுதியில் தொடர்ந்து மின்தடை நிலவி வருகிறது.
மாடர்ன் சிட்டியில் புதன்கிழமை மதியம் 2 மணிக்கு தடைபட்ட மின்சாரம் இரவு 8 மணிக்கு சீரானது. ஆவடி பகுதியில் காமராஜர் புதிய ராணுவ சாலை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பல இடங்களிலும் தொடர்ந்து மின்சாரம் தடைபட்டது. வியாழக்கிழமையும் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொது மக்கள் புழுக்கத்தால் தவித்தனர். திருமுல்லைவாயல் பகுதி யில் தினசரி இரண்டு மணி நேரம் தொடர் மின் தடை ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.