districts

img

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக...

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் போரை நிறுத்த வேண்டும், ஒன்றிய அரசின் இஸ்ரேல் சார்புத் தன்மையை கைவிடக் கோரி புதனன்று (அக்.18) பூக்கடை தொலைபேசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல் சென்னை ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எம்.ஸ்ரீதர சுப்ரமணியன், தலைவர் கே.கோவிந்தராஜ், ஒப்பந்த ஊழியர் சங்க தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்டோர் பேசினர்.

இஸ்ரேலின் போரை நிறுத்தவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மாநிலக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் வியாழனன்று (அக்.19) போராட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் வே.அருண்குமார், மாநிலக்குழு உறுப்பினர் தமிழ் உள்ளிட்டோர் பேசினர்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், உடனடியாக இஸ்ரேல் ராணுவம் போரை நிறுத்த வலியுறுத்தியும் செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கைகோர்த்து நின்று முழக்கமிட்டனர். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு.தமிழ் பாரதி, கிளைத் தலைவர் சாரதி, கிளைச் செயலாளர் சத்யா, துணைத் தலைவர்கள் புஷ்பராஜ், சாரதி, துணைச் செயலாளர்கள் பசுபதி, முத்துப்பாண்டி மற்றும் பலர் பங்கேற்றனர்.