கிருஷ்ணகிரி,செப்.24- ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் குந்தாரப்பள்ளி செயின் பீட்டர்ஸ் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி வளாகத்தில் பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பொது மருத்துவம் ,குழந்தை பேறு,காது மூக்கு தொண்டை,எலும்பியல், கண் மகப்பேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது. இதில் 20 கிராமங்களிலிருந்து 600 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.