ராணிப்பேட்டை, அக். 17 - மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாயன்று (அக். 17) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, சக்கர நாற்காலி மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி வழங்கினார். முகாமில் 342 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இவர்களில் 221 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்கினார். 183 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கான பதிவு, 73 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைக்கு பதிவு மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மருத்துவர்கள், மாற்றுத்திறனாளி நல அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.