districts

img

சிறுதானிய உணவு திருவிழா

திருவண்ணாமலை,டிச.26- திருவண்ணாமலை காந்திநகர் பேருந்து நிலைய மைதானத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ரோட்டரி வேகன் சங்கம், மற்றும் பசுமை விகடன், காளீஸ்வரன் ஆயில் மில், ஆகியவை இணைந்து நடத்தும் சிறுதானிய உணவு திருவிழா நடை பெற்று வருகிறது. துவக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ. வே.கம்பன், ரோட்டரி மாவட்ட ஆளுநர் பி.பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஏ.ராம கிருஷ்ணன் வரவேற்றார்.  தமிழ்நாடு சட்டப் பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி சிறுதானிய உணவு திருவிழாவை துவக்கி வைத்தார். இந்த விழாவில் சித்த மருத்துவர் கு.சிவராமன், சுல்தான் அகமத் இஸ்மாயில் மண்வாசனை மேனகா சித்த மருத்துவர் தில்லைவாணன் நிர்மலா குமாரி, மரபு விதை சேமிப்பாளர் பிரியா ராஜ நாராயணன் கோ.சித்தர் மாறன் ஆகியோர் கலந்து கொண்டு சிறு தானியத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினர்.  அதனை தொடர்ந்து சத்தியராமன் உலகளவில் சிறுதானியத்தின் முக்கியத்து வம் குறித்தும் அறிவுடைநம்பி சிறுதானி யங்களின் சில சிந்தனைகள் குறித்தும் செல்வம் பூச்சிகளை புரிந்து கொள்வோம் நஞ்சில்லா உணவுக்கான நல்வழி குறித்தும் சொற்பொழிவாற்றினார்.  மதுரை முத்து சிறப்பு பட்டிமன்றம், சென்னை லயோலா கல்லூரி மாணவர்க ளின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.