திருவண்ணாமலை,மார்ச் 6- திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் சிறுபான்மை மக்கள் 24 பேருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. ஏழை சிறுபான்மையினருக்கு தையல் இயந்திரம் வழங்கக்கோரி கடந்த பிப் 14 அன்று வந்தவாசிக்கு வந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பண்டியனிடம் சிறுபான்மை மக்கள் நல குழு சார்பில் மனுஅளித்தனர். அதன் அடிப்படையில், புதனன்று (மார்ச் 6) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்தவாசி வட்டாரத்தை சேர்ந்த சிறுபான்மை மக்கள் 24 பேருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் அப்துல் காதர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன், மாவட்ட குழு உறுப்பினர் ச.குமரன், தையல் கலைஞர்கள் சங்க செயலாளர் ஜீனத் ஆகியோர் உடன் இருந்தனர்.