கடலூர்,அக்.1- கடலூர் சட்டமன்றத் தொகுதியிலேயே புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பாக கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே கடந்த ஆட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த பேருந்து நிலை யத்தை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம். புதூர் பகுதிக்கு மாற்றும் முயற்சி நடைபெற்றது. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்துக் கட்சியினர், கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்கள், பொது நல அமைப்புகள் சார்பாக தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் நடை பெற்ற திட்டக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் பேசும் பொழுது எம்.புதூரில் தான் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அர சாணை வர உள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் கடலூர் மக்களின் கோரிக்கையை ஏற்காமல் பேருந்து நிலை யத்தை குறிஞ்சிப்பாடி தொகுதியான எம்.புதுருக்கு கொண்டு செல்வதை கண்டித்து அனைத்து குடியிருப்போர் நலச் சங்க ங்களின் கூட்டமைப்பினர் கருப்பு பட்டை அணிந்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்ட மைப்பின் பொதுச் செயலாளர் பி.வெங்க டேசன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் மாயவேல், முனுசாமி, ராஜேந்திரன், கல்யாண குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை பொதுச் செயலாளர் தேவநாதன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பொதுநல இயக்கங்களின் கூட்ட மைப்பின் தலைவர் எஸ்.என்.கே.ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் அமைப்பு செயலாளர் திருமார்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன், ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரை யாற்றினர். கூட்டமைப்பின் தலைவர் பாலு.பச்சையப்பன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டமைப்பின் சிறப்பு தலைவர் எம்.மருதவாணன் நிறைவுரையாற்றினார். பெரியகங்கணாங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் மாறன், காங்கிரஸ் பிரமு கர் ரமேஷ், கூட்டமைப்பு நிர்வாகிகள் ராஜ சேகரன், பன்னீர்செல்வம், செல்வகணபதி, கோமதி நாயகம், கோபால், பாஸ்கர், காசி நாதன், தில்லைநாயகம், வீராசாமி நடராஜன் மற்றும் குடியிருப்போரும் அனைத்து பொது நல அமைப்பினரும், அனைத்து கட்சி யினரும் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ரமணி நன்றி கூறினார்.