கடலூர்,டிச.23- சாதிவாரி கணக்கெடுப்பு ஏன், எதற்கு என்ற தலைப் பில் கடலூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கருத்த ரங்கம் நடைபெற்றது.முன்னணியின் மாவட்ட தலைவர் ஜே.ராஜேஷ் கண்ணன் தலைமை தாங் கினார். மாவட்டப் பொரு ளாளர் வி.சுப்புராயன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றினார். மாவட்ட தலையீடுகள் எதிர் கால வேலை திட்டம் குறித்து மாவட்டச் செயலாளர் பழ. வாஞ்சிநாதன் பேசினார். இந்த கருத்தரங்கில் மாவட்ட நிர்வாகிகள் எம். மருதவாணன், டி.பழனி வேல், ஆர்.கே.சரவணன், எஸ்.பிரகாஷ், பால்கி, எஸ்.கே.பக்கிரான், ஜி.வைத்திலிங்கம், எம்.பி. தண்டபாணி, எஸ். தட்சிணா மூர்த்தி உள்ளிட்ட பலர் பேசினர். ஆணவ படுகொலை களை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும். ஒரே ஊர் ஒரே சுடுகாடு அனைத்து சாதியினருக்கும் ஒரே இடத்தை உருவாக்க வேண்டும், தனியார் துறை யில் இட ஒதுக்கீடு அறிவிக்க வேண்டும், பட்டி யலின மக்கள் மீது தொடரும் சாதிய ரீதியான தாக்குதலை தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினர்.