districts

சொத்து வரி செலுத்தாத  203 வீடுகளுக்கு சீல்

சென்னை,மார்ச் 25-  சென்னை மாநகராட்சி பகுதிகளில் சொத்துவரி செலுத்தாதவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம்  நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சொத்து வரி செலுத்த இன்னும் 1 வார கால அவகாசம் உள்ள நிலையில் அதிகாரிகள் சொத்துவரியை வசூலிக்க அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 550-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.  இதில் உள்ள 203 வீடுகள் கடந்த 6 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தவில்லை. இதன் மூலம் ரூ.31 லட்சம் சொத்துவரி பாக்கி உள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பட்டது. ஆனால் அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து இந்த 203 வீடுகளுக்கும் சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி ராயபுரம் உதவி வருவாய் அலுவலர்கள் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர். அங்கு சொத்துவரி செலுத்தாத 203 வீடுகளுக்கும் சீல் வைத்தனர்.

;