திருவண்ணாமலை, ஆக. 19- திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியின் 125 ஆவது ஆண்டு விழா மற்றும் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமையன்று (ஆக.19) நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசி ரியர் ஹூயூபர்ட் தனசுந்தரம் தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார். பள்ளியின் முன்னாள் மாண வர்கள் சங்கம் மற்றும் இப்போது 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் 1,500 பேர் சேர்ந்து 1,000 அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்காட்சி யில் வைத்திருந்தனர். முத்தாய்பாக, புவி வெப்பமயமாதலைத் தடுத்தல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்பு, சுற்றுப்புறம் மாசு பாடுவதைத் தடுத்தல், கடல் வாழ் உயி ரினங்களைப் பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வு, மனித உடல் இயக்கத்தின் செயல்பாடு, பழங்கால நாணயங்கள் கண்காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. எரிமலை , கடலில் படகு இயங்கும் விதம், தனிம வரிசை அட்டவணை அமைப்பு, ரத்தத்தை இதயம் சுத்தி கரிப்பது எப்படி? என்பன போன்ற செயல் விளக்கங்களை மாணவ-மாணவிகள் தத்ரூபமாக செய்து காட்டினர். அறிவியல் கண்காட்சியில் வகுப்பு வரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த கண்டுபிடிப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.