இலங்கை கம்யூனிச இயக்கத் தலைவர் கே.டானியல் எழுதிய ‘சாநிழல்’ குறுநாவல் மறுமதிப்பு வெளியீட்டு விழா செவ்வாயன்று (ஆக. 22) சென்னையில் நடைபெற்றது. நூலின் முதல் பிரதியை பேரா.அ.மார்க்ஸ் வெளியிட, கே.டானியலின் மகன் டானியல் வசந்தன் பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டக்குழு நடத்திய இந்நிகழ்வில் தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பேரா. லெனின், எழுத்தாளர் ஷோபாசக்தி, தமுஎகச மாவட்டத் தலைவர் பேரா.அருண்கண்ணன், செயலாளர் ராஜசங்கீதன், முனைவர் அருந்தமிழ் யாழினி உள்ளிட்டோர் பேசினர்.