ராணிப்பேட்டை, டிச. 12 - அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழி யர்கள் சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வா யன்று (டிச. 12) ராணிப்பேட்டை தலைமை தபால் நிலையத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் கவுரவ தலைவர் டி. ஞானவேல், செயலாளர் எம். சாமிநாதன், பொருளாளர் டி. எத்திராஜ் உள்ளிட்ட கிராம அஞ்சலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை, ஓய்வூதியம் உட்பட அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் அனைத்து சாதகமான பரிந்துரைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் படி வழங்கப்பட்ட புதிய அடிப்படை ஊதியத்தை 1.1.2016 முதல் வழங்க வேண்டும். ஜி.ஐ.எஸ் தொகையை 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். 180 நாட்கள் விடுப்பு சேமித்து பணமாக்கும் வசதியை வழங்க வேண்டும். கிராமிய ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ வசதி களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.