districts

img

பற்களுக்கான வேர்கால் சிசிக்சை சவீதா பல்கல்லூரி மாணவர் உலக சாதனை

சென்னை, மே 12-

   டைனமிக் நேவிகேஷன் சிஸ்டத்தை பயன்படுத்தி பற்களுக்கான வேர்கால் கள் சிகிச்சையை வெற்றி கரமாக செய்து சவீதா பல் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த இளங்கலை மாண வர் லிங்கம் சாய்சரண் உலக  சாதனை படைத்துள்ளார்.  

  பற்களுக்கான வேர்கால் கள் சிகிச்சை மற்றும் பூச்சிகளை அகற்றுதல் உள்ளிட்டவற்றை இந்த மாணவர் நேவிடென்ட் டைனமிக் நேவிகேஷன் சிஸ்டத்தைப் பயன்படுத்தி, முப்பரிமாண வழிமுறையை மேற்கொண்டு செய்துள் ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

  அந்த மாணவருக்கான சாதனை விருதை சிமாட்ஸ் வேந்தர் மற்றும் நிறுவனர் என்.எம். வீரையன், கல்வியியல் இயக்குநர் தீபக் நல்லசுவாமி, பதிவாளர் ஷீஜாவர்கீஸ் மற்றும் சவீதா பல் மருத்துவ  கல்லூரி டீன் அரவிந்த்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்திய உலக சாதனை புத்தகத்தின் இயக்குநர் கே. சதாம் உசேன் வழங்கி னார்.