districts

img

உயிர்க்கொல்லி மின்வேலியை அகற்றுக பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூர் அக் 4- பொன்னேரி அருகே அரசுக்கு  சொந்தமான மேய்கால் புறம்போக்கு  நிலத்தை ஆக்கிரமித்து கால்நடை களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் வேலி  அமைப்பு, புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட ஆவூர் கிராமத்தில் சுமார் 980 ஏக்கர் பரப்பளவிலான ஏரி உள்ளது, மழைக் காலங்களில் இந்த ஏரியில் தேங்கும் தண்ணீரை அப்பகுதி விவசாயி கள் பாசனத்திற்கும்,  கால்நடைகளை பராமரிக்கவும் பயன்படுத்தி வருகின்ற னர். மேலும் ஏரியின் வெளிப்புற   கரைப்பகுதியில் உள்ள மேய்கால் புறம்போக்கு நிலத்தில் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளில் மேய்ச்ச லுக்கு சென்று வருவது வழக்கம். இந்த  நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த  சிலர் சட்டவிரோதமாக அரசுக்கு சொந்த மான சுமார் 25  ஏக்கர் பரப்பளவுள்ள மேய்கால்  புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து போலி ஆவணம் மூலம் பட்டா பெற்றுள்ளதாக கூறப்படு கிறது. அந்த நிலத்தை சுற்றிலும் சட்ட  விரோதமாக கால்நடைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் வேலி அமைத் துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேய்கால் புறம்போக்கு நிலத்தை மீட்க கோரி பலமுறை வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை புகார்  மனு அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திர மடைந்த கிராம மக்கள் புதனன்று (அக் 4), அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து பொன்னேரியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவ லகம் முன்பாக சாலை மறியல் ஈடுபட்ட னர். இதனை அடுத்து அங்கு வந்த அதிகாரிகள், வட்டாட்சியர்  ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது, பின்னர் நேரடியாக ஆய்வு செய்த வட்டாட்சியர் மதிவாணன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.