districts

img

கட்சி கிளை உதயம்

ராணிப்பேட்டை, நவ.7 -  ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா பகுதிக்குட்பட்ட மருதாளம் கூட்ரோடு சாலை பகுதியில் வி. வேலு தலைமையில் செவ்வாயன்று (நவ. 7) மருதாளம் கட்சியின் புதிய கிளை துவக்க விழா மற்றும் நவம்பர் புரட்சி தின விழா நடைபெற்றது. கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என். காசிநாதன் கொடியேற்றி உரையாற்றினார். தாலுகா செயலாளர் ஆர். மணிகண்டன், மாவட்டக் குழு உறுப்பினர் என். ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.