ஆவடி,ஆக.22-
கொலை, கஞ்சா மற்றும் சரித்திர பதிவேடுகளில் சம்பந்தப்பட்ட 60 ரவுடிகளை ஆவடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் கொலை குற்றங்களில் சம்பந்தப்பட்ட வர்கள் 28 பேர், கொலை முயற்சி வழக்குகளில் 11 பேர், கஞ்சா வழக்கில் ஒருவர், பிடியாணை குற்றவாளி ஒருவர் மற்றும் இதர முக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 19 பேர் என மொத்தம் 60 ரவுடிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.