புதுச்சேரி, ஜன.14- தமிழர்களின் வாழ்வைப் பொலிவுறச் செய்யும் நன்னாளாக பொங்கல் அமை யட்டும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தி வருமாறு :- மனித குலம் தொடர்ந்து இயங்க உதவும் இயற்கையையும், இயற்கையுடன் இயைந்து செய்யக்கூடிய வேளாண்மை யையும், அதற்கு உற்ற துணையாக விளங்கக்கூடிய கால்நடைகளையும் போற்றி வணங்கி, நன்றி செலுத்தும் உன்னத கலாச்சார மரபைத் தன்னகத்தே கொண்ட இனம் தமிழினம். இதை உலகிற்கு பறைசாற்றுவதற்கான தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு பண்பாட்டு திரு விழாவாக பொங்கல் பண்டிகையை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். உணவுப் பாதுகாப்புடன் விவசாயி களின் வாழ்வாதாரத்தைப் பாது காக்கவும், கிராமப்புற பொரு ளாதாரத்தை உயர்த்த வும் வேளாண்மையை மேம்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. உழவுத்தொழிலை நவீன வேளாண் தொழில்நுட்ப முறைகளுடன் பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்துவதோடு, சந்தை சார்ந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி, விவ சாயிகளின் நலனைக் காப்பதையும் எனது அரசு கடமையாகக் கொண்டுள்ளது. தமிழர்களின் உணர்வுடனும் கலாச்சாரத் துடனும் இரண்டறக் கலந்திருக்கும் தைப்பொங்கல் நன்னாளும், இதனைத் தொடர்ந்து வரும் திருவள்ளுவர் நாளும் தமிழர்களின் வாழ்வைப் பொலிவுறச் செய்யும் நன்னாளாக அமையட்டும். அனைவரது இல்லங்களிலும் வளர்ச்சி ஓங்கவும், மகிழ்ச்சி பொங்கும் எனது உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.