districts

img

புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்-திமுக வெளிநடப்பு: பாஜக தர்ணா

புதுச்சேரி,செப்.20- புதுச்சேரி சட்டப் பேரவை கூடிய 23 நிமிடங்க ளிலேயே காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. புதுச்சேரி 15 ஆவது சட்டப்பேரவையின் 4 வது கூட்டத் தொடரின் இரண்டாவது கூட்டம்  புதனன்று (செப். 20) காலை 9.37 மணிக்கு  கூடியதும் பேரவைத் தலைவர் செல்வம், இரங்கல் குறிப்பு வாசித்தார். உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமி டம் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, ஜி-20 மாநாடு, சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு பேரவைத் தலைவர் பாராட்டு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தணிக்கை துறை தலை வரின் அறிக்கையை முதல மைச்சர் ரங்கசாமி சமர்பித்தார்.  பிறகு, 2023 ஆம் ஆண்டு புதுச்சேரி எம்எல்ஏக்கள் தகுதி இழத்தல், தடுத்தல் திருத்த சட்ட முன்வரைவை அமைச்சர் லட்சுமி நாராயணன், சரக்கு மற்றும் சேவை வரி திருத்த முன்வரைவை முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தாக்கல் செய்தனர். இந்த மசோ தாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது காலவரையின்றி பேரவை ஒத்திவைக்கப்பட்டது. மொத்தத்தில் 23 நிமி டத்தில் இந்த கூட்டம் முடி வடைந்தது. வெளிநடப்பு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரி வித்தது, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா (திமுக) மாநில அரசு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள காலதாமதங் களை சுட்டிக் காட்டி  முழக்கம் எழுப்பினர்.  அப்போது, மகளிருக்கு ரூ. 1000 வழங்கும் திட்டத்தை அனைத்து தொகுதிகளிலும் செயல் படுத்தவில்லை, தொகுதி அளவில் நடைபெற  வேண்டிய பணிகள், மக்கள் நல பணிகளை செயல்படுத்தவில்லை என்றும் இந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றார். இதற்கு பேரவைத் தலை வர் அனுமதி மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் சிவா தலைமையில் ஒட்டு மொத்தமாக வெளிநடப்பு செய்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளி நடப்பு செய்தனர். தர்ணா பாஜக உறுப்பினர் கல்யாணசுந்தரம், சுயேச்சை உறுப்பினர் அங்காளன் ஆகியோர் முதல்வர் ரங்கசாமி மறை முகமாக குற்றஞ்சாட்டி சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் முன்பு தர்ணா வில் ஈடுபட்டனர். பிறகு, பேரவை கூட்டத்தை புறக் கணித்தனர்.