districts

சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகள் சென்னையில் இன்று முதல் கண்காட்சி

சென்னை, செப்.5- அனைத்து மாநிலங்க ளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் சாராஸ் மேளா, நவராத்திரி விற்பனைக் கண்காட்சி துவக்க விழா மற்றும் 75ஆவது சுதந்திரத் திரு நாள் அமுதப் பெருவிழா  சென்னையில் செவ்வா யன்று (செப்.6) தொடங்கு கிறது. சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில, மாவட்ட வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளைத் தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது. ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறையானதுக் கிராமப்புற கைவினைக் கலைஞர்கள் தங்களின் தயாரிப்புப் பொருட்களைக் காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏது வாக பல்வேறு மாநில அரசுக ளுடன் இணைந்து `SARAS’ எனப்படும் விற்பனைக் கண்காட்சிகளை நடத்தி  வருகிறது. இக்கண்காட்சி களில் பல்வேறு மாநிலங்க ளைச் சேர்ந்த கிராமப்புறக் கைவினைஞர்கள் தயாரிக் கும் பழம்பெருமை வாய்ந்த  கலைப் பொருட்கள், பாரம்பரிய உணவு வகை கள், புவிசார் குறியீடு பெற்ற  தனித்துவம் வாய்ந்த பொருட்கள், இயற்கை  வழியில் தயாரித்த பொருட்கள் விற்பனை செய்யப் படுகின்றன. இந்தக் கண்காட்சி செப் 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. செப்.6 மாலை 5.30 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு மகளிர் மேம் பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெறவுள்ள துவக்க நிகழ்ச்சியில்  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்  கேஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு, சாராஸ்  மேளா மற்றும் நவராத்திரி  விற்பனைக் கண்காட்சியி னைத் துவக்கி வைக்க வுள்ளார். 

;