வேலூர். செப் 11 - வேலூர் மாநகராட்சி 10வது வார்டுக்குட்பட்ட காங்கேயநல்லூர் காம ராஜர் வீதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அந்த தெருவில் குடி நீர் முறையாக வழங்கப்பட வில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் 10வது வார்டு மாமன்ற உறுப்பினரி டம் முறையிட்டதற்கு, அவர் குழாயில் அடைப்பு உள்ளது சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தற்காலிக டிராக்ட ரில் தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்தார். அவரிடம் கூறி 1வார காலமாகியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதனால் பொதுமக்கள் அத்தியாவ சிய தேவைகள் மற்றும் குடிக்ககூட நீரின்றி அவதிப் படும் சூழல் ஏற்பட்டது. மீண்டும் மாமன்ற உறுப்பி னரிடம் பொதுமக்கள் மற்றும் சிபிஎம் சார்பில் முறை யிட்ட போது தற்காலிகமாக 2 லாரி தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது ஆனால் பிரச்சினை தீர்ந்தபாடு இல்லை. எனவே பிரச்சனைக் குரிய குடிநீர் குழாய்களை உடனடியாக சரிசெய்து பொதுமக்களின் அத்தியா வசிய தேவைகளுக்கு தண்ணீர் விநியோகத்தை தடையின்றி வழங்குமாறு காமராஜ் வீதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பின்னர் வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜாவிடம் மனு அளித்தனர். இதையொட்டி மண்டலத் தலைவர், மாநகராட்சி அதிகாரிகளுடன் சம்மந்தப் பட்ட இடத்திற்கு நேரடி யாக சென்று ஆய்வு செய்து குடிநீர் குழாய் இணைப்பு களில் அடைப்புகளை நீக்க நடவடிக்கை எடுத்தார். இதனால் குடிநீர் விநியோ கிக்கப்பட்டது. சிபிஎம் தலையீட்டின பேரில் உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு கட்சி நிர்வாகிகள் மண்டல தலைவருக்கு நன்றி தெரிவித்தனர். காட்பாடி வட்ட செயலாளர் ஆர்.சுடரொளியன், கிளை உறுப்பினர்கள் ஆர்.குப்பு சாமி, லோ.நவீன், ஜி.ஆர். கோவிந்தசாமி உள்ளிட் டோர் மண்டல தலைவரை சந்தித்துப்பேசினர்.