districts

img

மலைவாழ் மக்களுக்கு உணவு திருத்தணி பீகாக் மருத்துவமனை வழங்கியது

திருத்தணி, அக். 17- திருத்தணி அரக்கோ ணம் சாலையில் இயங்குகிற பீகாக் மருத்துவமனை சார்பாக மாதந்தோறும் கிராமங்களை தேடி இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திங்க ளன்று  உலக உணவு தினத்தையொட்டி திருத்தணி அடுத்த பட்டா பிராமாபுரம் கிராமம் ஆர்டிஓ சத்யா நகரில் வசிக்கும் இருளர் எனும் மலைவாழ் மக்களுக்கு  உணவுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருத்தணி பீகாக் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் எம். ஸ்ரீகிரண் நேரடியாக சென்று குடிசைகளில் வசிப்பவர்கள் இடத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் நலம் விசாரித்து 25 குடும் பங்களைச் சேர்ந்த 100  பேருக்கு உணவு பொட்ட லங்களை வழங்கினார். தேவைப்படுவோருக்கு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை குறைந்த  கட்டணத்தில் செய்து தரப் படும் என்று தெரிவித்தார் நிகழ்ச்சிக்கு  மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர்  அந்தோணி முன்னிலை வகித்தார். தன்னார்வலர் சந்தியா வரவேற்று பேசினார் மற்றும் மருத்துவமனை  ஊழியர்கள் கலந்து கொண்டனர்.