மேற்கு முகப்பேர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி செவ்வாயன்று (மார்ச் 7) பள்ளி கல்வி இயக்ககத்தின் ஆணையர் நந்தகுமாரிடம், இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்த், செயலாளர் ரா.பாரதி உள்ளிட்டோர் மனு அளித்தனர்.