சென்னை, ஆக. 12-
மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளர் களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.
சென்னை வடக்கு கிளை தண்டையார் பேட்டை கோட்ட 19ஆவது மாநாடு கே.சின்னையன் தலைமையில் விம்கோ நகரில் நடைபெற்றது.
எஸ்.கந்தசாமி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செயலாளர் ஆர்.ரவிக் குமார் மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். கோட்ட செயலாளர் டி.சந்திரசேகர் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில துணைத் தலைவர் எம்.சாலட், திட்ட தலைவர் பி.கதிரேசன், பொருளாளர் ஜி.சத்திய மூர்த்தி, வடக்கு துணைத்தலைவர்கள் ஜி.மதனகோபால், கே.வெங்கடைய்யா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக இணைச்செயலாளர் கே.திருநீர் செல்வம் வரவேற்றார். கே.சின்னையன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மின்சார சட்டம் 2023ஐ திரும்பபெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், களப்பணியாளர் உதவியாளர், கம்பியாளர், வணிக உதவியாளர் ஆகியோருக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு தேவையான தளவாடப் பொருட்களை வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை அடை யாளம் கண்டு நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
தலைவராக ஸ்டாலின் செயலாளராக திருநீர் செல்வம் உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.