districts

காசிமேட்டில் மீன் வாங்க பொதுமக்கள் ஆவல்

ராயபுரம்,அக்.16- வடசென்னையின் மீன் வர்த்தகத்தில் முக்கிய பகுதியாக கருதப்படும் காசி மேட்டில் ஞாயிறன்று மீன் வாங்க திரளா னோர் குவிந்தனர்.  100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஞாயிறன்று கரை திரும்பியதால் வஞ்சிரம், வவ்வால், திருக்கை மீன்கள், ஊடான், வஞ்சிரம், சூறை, உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.1100-வரை விற்பனை ஆனது. வவ்வால்மீன்-ரூ.800, பாறை ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.  இதுகுறித்து மீன் வியா பாரிகள் கூறும்போது, புரட்டாசி சனிக்கிழமை முடிந்ததால் மீன் வியாபாரம் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது இந்த வாரம் கடலுக்கு செல்லாமல் இருந்த விசைப்படகுகள் அதிக அளவில் கடலுக்கு சென்று திரும்பின.   மீன்களின் வரத்து மற்றும் பெரிய அளவிலான திருக்கை மீன்கள், ஊடான், வஞ்சிரம், சூறை, உள்ளிட்ட மீன்கள் அதிக அளவில் பிடிபட்டுள்ளன. அசைவ பிரியர்களின் கூடுதல் வருகையால் காசிமேடு மீன் பிடி துறைமுகம் களை கட்டியுள்ளது. சில்லரை வியாபாரிகளும் தங்கள் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வ தற்காக ஏலத்தில் அதிக அளவில் மீன்களை வாங்கி சென்றனர் என்றார். காசிமேட்டில் மீன் விலை (கிலோவில்)வருமாறு:- வஞ்சிரம்- ரூ.1100 வவ்வால்- ரூ.800 பாறை- ரூ.600 சங்கரா- ரூ.400 திருக்கை- ரூ.350 நெத்திலி- ரூ.200 சூறை- ரூ.500 கடம்பா- ரூ.400 இறால்- ரூ.350 என்றிருந்தது.

;