சென்னை,ஜன.25- சென்னை பள்ளிக்கரணை வேலம்மாள் நியூ ெஜன் கிட்ஸ் பள்ளியின் ஆண்டு விழா பள்ளியின் முதல்வர் அனுராதா ஈஸ்வரா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், இந்திய பாட்மிட்டன் வீரர் ஆதித்யா இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒலிம்பிக் ஒளியை ஏற்றி வைத்தார். பள்ளி மாணவர்கள் பங்கேற்ற யோகா, பிரமிட், கிளாசிக்கல் டான்ஸ் உள்பட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு வெற்றி கோப்பை கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியின் இயக்குநர் ஜெயஹரிஷ், நாதன் சம்பந்தன், வேல்முருகன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.