சென்னை, டிச.17- சென்னையில் உள்ள பிரசாந்த் மருத்துவமனை 4வது தலைமுறை ரோபோ உதவியுடன் 100க்கும் மேற்பட்ட முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க சாதனையை மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், பிரசாந்த் மருத்துவமனை யின் மூட்டு மறுசீரமைப்பில் முன்னோடி டாக்டருமான ஆறுமுகம் தலைமை யிலான குழு செய்துள்ளது. கடுமையான மூட்டு வலியால் பாதிக்கப்படுப வர்களுக்கு முழங்கால் செயல்பாட்டை மேம்படுத்த மொத்த முழங்கால் மாற்று சிகிச்சை சிறந்த தீர்வாக உள்ளது. அத்தகைய நோயாளிகளுக்கு ரோபோ உதவியுடன் செய்யப்படும் சிகிச்சையானது அறுவை சிகிச்சை நிபுணரின் துல்லி யத்தை பல மடங்கு அதி கரிக்க உதவுகிறது. இது அறுவைசிகிச்சையின் போது ஏற்படும் ரத்த இழப்பை வெகுவாக குறைப்பதோடு, வழக்க மான முறைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது அறுவை சிகிச்சைக்குப் பின் வலி என்பது மிகக் குறைவாக இருக்கும். மேலும் ஹைடெக் ரோ போவைக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளும் போது இமேஜ் அடிப்படை யிலான, சிடி ஸ்கேன் அல்லது வேறு எந்த கதிர்வீச்சு பரிசோதனையும் தேவையில்லை. மொத்த முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் வழக்கமாகப் பயன்படுத்தும் கருவிகளைக் காட்டிலும் இதில் உள்ள அமைப்புகள் மருத்துவர்களுக்கு மிகுந்த உதவிகரமாக உள்ளன. இதன் மூலம் நோயாளியின் முழு மூட்டுவலி குணமாவ தோடு, அந்த நோயாளிகள் இயல்பு நிலைக்கு வெகு வேகமாக திரும்பி எளிதாக நடக்கவும் விரைவாக குண மடையவும் செய்கிறது என்று டாக்டர் ஆறுமுகம் கூறினார். இந்த சாதனை குறித்து பிரசாந்த் மருத்துவமனை யின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா கூறுகையில், இந்த சாதனை எங்கள் குழுவிற்கு ஒரு முக்கிய மைல்கல் என்றார்.