districts

வாக்கு எண்ணும் மையத்தில் வெளியாட்கள் நடமாட்டம்

தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

சென்னை, ஏப். 16- நெய்வேலியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் 3 கம்ப்யூட்டர் நிபுணர்கள் செல்வதற்கு அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக  தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் வெளியாட்கள் நடமாட்டம் இருக்கிறது. ஏற்கனவே இது தொடர்பாக கடந்த 14-ந்தேதி புகார் செய்திருந்தோம். அப்  படியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே  எங்கள் தலைவரின் புகார் கடிதத்தை நேரடி யாக கொடுத்துள்ளோம். ராமநாதபுரத்தில் ஒரு வாக்கு எண்ணும் மையத்தில் 31  லேப்-டாப்புடன் வெளியாட்கள் சென்று  இருக்கிறார்கள். அதே போல் திருக்கோவி லூர் தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்  தில் உள்ள கல்லூரியில் இன்று தேர்வு நடத்து வதற்கு அனுமதி கொடுத்து இருந்தார்கள். இதை அறிந்து கண்டித்ததும் வெளியே அனுப்பியதாக கூறினார்கள். நெய்வேலியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் 3 கம்ப்யூட்டர் நிபுணர்கள் செல்வதற்கு அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரி லும் கம்ப்யூட்டர் நிபுணர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அங்குள்ள கண்காணிப்பு கேம ராக்களும் சுமார் 30 நிமிடங்கள் செயல்படா மல் இருந்துள்ளது. இதே போல் பல இடங்களில் விதிமீறல்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக மத்திய  தேர்தல் ஆணையத்துக்கும் புகார் தெரி வித்துள்ளோம். வாக்குப்பதிவு நடந்து முடிந்து  மின்னணு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வைக்கப்பட்டதும் அந்த பகுதியில் வெளியாட்கள் யாரும் நடமாடக் கூடாது என்பது விதி. ஆனால் அதையும் மீறி இந்த மாதிரி  வெளிநபர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார் கள். இது மத்திய-மாநில அரசுகள் ஒத்து ழைப்புடன் நடைபெறுகிறதா? என்ற சந்தேகம்  ஏற்பட்டுள்ளது. எனவே தேர்தல் அதிகாரியி டம் புகார் தெரிவித்துள்ளோம். அவர் நடவ டிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

;