districts

img

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிராக ஆவேசம்!

சென்னை, ஏப். 4 - பெட்ரோலியப் பொருட்கள், மருந்து களின் விலையையும், சுங்க கட்டணத் தையும் ஒன்றிய பாஜக கடுமையாக உயர்த்தி வருகிறது. இதனை கண்டித்து  திங்களன்று (ஏப்.4) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை யில் 70 மையங்களில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்க ளில் சமையல் எரிவாயு உருளைக்கு நாமம் போட்டு, மாலை அணிவிப்பதும், விறகு அடுப்பை வைத்தும், இரு சக்கர  வாகனங்களுக்கு மாலை போட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடசென்னை மாவட்டத்தில், திருவொற்றியூர், மணலி, மாதவரம், பெரம்பூர், ராயபுரம், ஆர்.கே.நகர், அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிக் குட்பட்டு 50 மையங்களில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. மத்திய சென்னை மாவட்டத்தில், வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணா நகர், ஆயிரம்விளக்கு, துறைமுகம்,  சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளுக்குட்பட்டு 10 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தென்சென்னை மாவட்டத்தில், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மயிலாப்பூர், தி.நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய 10 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தல் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணாவும், ஊத்துக்கோட்டை அருகே தண்டலம் பஜாரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபாலும் கலந்து கொண்டனர்.

;