சிதம்பரம், பிப். 2- அண்ணாமலை பல் கலைக்கழகம், இயற்கை மற்றும் வளம் குன்றா வேளாண் மையம் மற்றும் பெங்களூரு மண்டல அங்கக – இயற்கை வேளாண் மையம் அங்கக இயற்கை வேளாண்மை பயிலரங்கம் பொறியியல் துறை கலையரங்க வளாகத் தில் நடைபெற்றது. பல் கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் துவக்கி வைத் தார். இதில் பங்கேற்ற வளம்குன்றா வேளாண்மை தலைவர் ஷோபனா குமார், சென்னை வேளாண் விளை பொருட்களை பதப்படுத்த வேண்டிய பொருளாதார முக்கியத்துவத்தை விளக்கினார். முன்னதாக இயற்கை மற்றும் வளம் குன்றா வேளாண்மை மையம் இயக்குநர் ராமன் வரவேற் றார். இதில் மண்டல அங்கக மற்றும் இயற்கை வேளாண் மைய மண்டல இயக்குநர் ரவீந்திர குமார் கருத்தரங்கத்தின் திட்ட அறிமுக உரையாற்றினார். கள்ளக்குறிச்சி, திருவா ரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களிலிருந்து இயற்கை வேளாண் விவசாயிகள் பங்கேற்று பயன் பெற்றனர். இந்த கருத்தரங்கில் இயற்கை வேளாண்மையில் உயர் விளைச்சல் பெறுவ தற்கு உத்திகள், கால்நடை களில் பங்கு மற்றும் பயிர் பாதுகாப்பு வழிமுறைகள் என்ற தலைப்பில் வேளாண் வல்லுநர்கள் உரை நிகழ்த்தினர். தமிழ்நாடு அரசின் நம்மாழ்வார் விருது பெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் சித்தரை கவுரவிக்கப்பட்டார்.