சென்னை, ஜூன் 22
வேங்கைவாசல் ஊராட்சி மன்றம் சார்பில் மேடவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக ராஜப்பா விளையாட்டு பூங்கா என்னும் பல்நோக்கு விளையாட்டு அரங்கு திறக்கப்பட்டுள்ளது.
நவின் ஸ்டார்வுட் டவர்ஸ் வழங்கிய திறந்தவெளி இடத்தில் 30 ஆயிரம் சதுர அடியில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா, அந்த பகுதி மக்களின் பொழுது போக்கு, விளையாட்டு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படும். சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை மக்களுக்கு அளிக்கும் நோக்கில் திறந்தவெளிக்கான இடத்தில் இந்த பூங்காவை நவின்ஸ் கட்டுமான நிறுவனம் அமைத்துள்ளது.
இந்த பூங்காவை வேங்கைவாசல் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயச்சந்திரன் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் நவின்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆர். குமார், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.