சென்னை,பிப்.3- சென்னை ராயபுரம் மண்டலம் 63-வது வார்டுக்குட்பட்ட கரீம் மொய்தீன் தெருவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.