districts

img

பெண்கள் மீதான வன்முறை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் மாநில அரசுக்கு மாதர்சங்கம் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 9- சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சிஐடியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கம், மாணவர் சங்கம், மாற்றுத்திறனாளி கள் சங்கம் சார்பில் பெரம்பூரில் புதனன்று (மார்ச் 8) நடைபெற்றது. மாவட்டத் தலை வர் எம்.கோடீஸ்வரி தலைமை தாங்கினார்.  இதில் மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் பி.சுகந்தி  பேசுகையில், இந்தியாவில் தினசரி 19 பெண்கள் வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கிறார்கள் என தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது. குடும்ப வன்முறை கள் அதிகளவில் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 2ஆவது இடத்தில் இருக்கி றது என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கின்ற போதை கலாச்சாரம்  நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருக்கின்றது. பள்ளிக்கூடங்களுக்கு அருகில் கஞ்சா மிகச்சுலபமாக கிடைக்கின்ற ஒரு மோசமான சூழல் நிலவி வருகிறது. இது அந்தந்த பகுதியிலே இருக்கின்ற காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் இல்லை. இதனால் இளம் வயதில் பள்ளி மாணவர்கள் மிகக் கடுமையான சீரழிவை சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் நாடு அரசு உடனடியாக தலையீடு செய்து  இந்த அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்  என ஜனநாயக மாதர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.  தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைத்து போதை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  விழுப்புரம் மாவட்டம் அன்பு ஜோதி பெண்கள் தங்கும் விடுதியில்  நடந்துள்ள பெண்கள் மீதான மோசமான வன்முறைகளை ஜனநாயக மாதர் சங்கம் கண்டிப்பதோடு அரசு அனுமதி இல்லாமல் இயங்குகின்ற விடுதிகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சமீபத்தில் பரமக்குடியில் ஒரு பள்ளி மாணவியை சில கயவர்கள் கடத்திச் சென்று  மிக மோசமான முறையில்  பாலியல் வன்பு ணர்வு செய்துள்ளனர். எனவே பெண்கள் மீதான வன்முறைகள் குறித்த ஒரு வெள்ளை  அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்து விவாதித்து தொடரும் பெண்கள் குழந்தை களின் மீதான வன்முறைக்கு தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் சு.லெனின் சுந்தர், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் எஸ்.ராணி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவண தமிழன், மாணவர் சங்க மாவட்டச்செயலாளர் எம்.நிதீஷ் ஆகியோர் பேசினர். முன்ன தாக உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப் புக்குழு மாவட்ட அமைப்பாளர் ஆர்.மணி மேகலை வரவேற்றார். ஜி.கார்த்திக் நன்றி கூறினார்.

;