districts

img

ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் மீன்வளத்துறை அதிகாரிகள்!

திருவள்ளூர், மே 6- திருவள்ளூர் மாவட்டம்,  பழவேற்காடு  இஸ்ரேல்  குப்பத்தில் வசித்து வருபவர் ரேச்சல் (க.பெ ஏசையா),  என்பவருக்கு சேமிப்பு நிவாரணம் ரூ.4500 வழங்க வேண்டும் என 2023 நவம்பரில் உத்தரவு நகலை தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைப்பட   வழங்கினார். இதுவரை ரேச்சல் என்ற மீனவ  பெண்ணுக்கு சேமிப்பு நிவாரணம் கிடைக்க வில்லை.  இது குறித்து பொன்னேரியில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் கங்காதரனிடம் கேட்டால் பொறுப்பற்ற முறையில் பதிலளிப்பதாக கூறப்படு கிறது. இன்னும் சேமிப்பு நிவாரணம் வழங்க வில்லை. இப்படி சிலருக்கு நிவாரணம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. நிஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை  சந்திக்க பழவேற்காடு வந்த போது, இடமணி குப்பத்தில் கட்டுமரத்தில் மீன் பிடி  தொழில் செய்பவர்களுக்கு  ஒரு கட்டு மரத்திற்கு ரூ.15,000 வழங்க வேண்டும் என அமைச்சர் காந்தி அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் திருவள்ளூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.நித்யானந்தம் மனு  அளித்துள்ளார். மேலும் எண்ணெய்  கசிவால் பாதிக்கப்பட்ட இடமணி, இஸ்ரேல்  குப்பம் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிச்சய மாக நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தனர். மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகை யில் செயல்படுவதாகவும் இதுகுறித்து கேட்டால் பொறுப்பற்ற முறையில் பதில்  கூறுவதாகவும் மீனவ மக்கள் குமுறுகின்ற னர்.

;