districts

img

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க அதிகாரிகள் ஒப்புதல்: போராட்டம் வெற்றி

விழுப்புரம், மார்ச் 11- விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சி புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் நடை பெறவிருந்த போராட்டங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சி புரம், அரகண்டநல்லூர், ஆயந்தூர், வீரபாண்டி மையங்களில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்க வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் வெள்ளியன்று (மார்ச் 11) நடை பெற இருந்தது.  இதுகுறித்து தகவ லறிந்த வட்டாட்சியர் கார்த்தி கேயன் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வரும் 17ஆம் தேதிக்குள் அனைத்து மையங்க ளிலும் நேரடி கொள்முதல் நிலையம் துவக்கி விடுவோம் என நுகர்வோர் வாணிப கழக அதிகாரிகள் உள்ளிட்டோர் எழுத்துபூர்வமாக வாக்குறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கண்டாச்சிபுரத்தின் சில பகுதிகளில் நிலவும் குறைந்த மின் அழுத்தத்தை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு வெள்ளியன்று (மார்ச் 11) ஆர்ப்பாட்டம் நடை பெற இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து குறைபாடுகளும் சீர் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து அந்த போராட்டமும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் எஸ்.கணபதி, கிளைச் செயலாளர்கள் எம்.ஸ்ரீதர், வி.சேகர், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சிவராமன், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன், என்.நாகராஜ், வட்டச் செயலாளர் ஓ.கே.முருகன், தலைவர் என்.வீரன், பொருளாளர் எம்.ராமலிங்கம், தனஞ்செழியன், எம்.வடிவேல், டி.பரமானந்தம், ஏ.முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;