districts

நந்தனம் சிக்னல் அருகில் 10 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

சென்னை,ஏப்.28-  சென்னை, நந்தனம் சிக்னல் அருகில் 10 நாட்களுக்கு சோதனை முறையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட் டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை, நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வெள்ளியன்று (ஏப்.29)  முதல் 10 நாட்களுக்கு பின் வரும் போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது. வெங்கட் நாராயணா சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் அண்ணா சாலை மற்றும் வெங்கட்நாராயண சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, நேராக தேனாம்பேட்டை நோக்கி 200 மீட்டருக்கு மேல் சென்று டோயாட்டோ  கார் ஷோரூம் முன்பு  “யு திருப்பம்”  மூலம்  இலக்கை அடையலாம். செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணா சாலை-செனடாப் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி 250 மீட்டருக்கு மேல் சென்று, டொயாட்டோ ஷோரூம் முன்  “யு திருப்பம்” திரும்பிச் சென்று அவர்கள் சேருமிடத்தை அடையலாம். பாரதிதாசன் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணா சாலை மற்றும் பாரதிதாசன் சாலை சந்திப்பில் இடது புறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி  நேராக 300 மீட்டர் தூரம் சென்று ஷோரூமுக்கு முன்னால் “யு திருப்பம்” திரும்பி அவர்களின் இலக்கை அடையலாம். இது சம்பந்தமாக ஆலோசனைகள் இருப்பின்   dcpsouth.traffic@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.