districts

img

கழிவுநீர் குழாய் அமைக்க எதிர்ப்பு மீனவ மக்களுக்கு எதிராக நவீன தீண்டாமை

சென்னை,மே 31- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1ல் உள்ள 1ஆவது வட்டத்தில் மீனவர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று  மாநகராட்சி சார்பில் பொதுக்கழிப்பிடம் புனரமைக்கப்பட்டுள்ளது.   பட்டா நிலத்தில் சுமார் 300 மீனவர் குடும்பங்கள் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த கழிப்பிடம் சீரமைக்கப்பட்டு இறுதிகட்டத்தை அடைந்து விட்டது. சிக்கல் இங்கு தான் துவங்குகிறது. 1ஆவது வட்ட திமுக கவுன்சிலர் சிவக்குமாரின் முன்முயற்சியால் தாழங்குப்பம் காலனி பட்டியலின மக்களின் நலனுக்காக இந்த பணி  மேற்கொள்ளப்படுகிறது. கழிப்பிடத் தின் குழாய் இணைப்பை 35 அடிக்கு  கொண்டுசென்று  பாதாளசாக்கடையில் வெளியேற்ற வேண்டும்.   இந்த குழாய் செல்லும் பாதை யில் மாற்று சமூகத்தினர் இருப்பதால் அவர்கள் குழாய் அமைக்க அனு மதிக்க மறுக்கின்றனர். மேலும் குழாயை பதிக்க வரக்கூடிய மாநக ராட்சி ஊழியர்களையும் கழிவுநீர்  அகற்று வாரியத்தின் ஊழியர்களையும் பணி செய்ய விடாமல் அவர்கள் சாதிய  வன்மத்தை தூண்டக் கூடிய வகையில் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கழிவு வெளியேற்றப்படும் குழாய் பதிக்கப்படக்கூடாது என்பதற்காக 5அடியில் சுவர் எழுப்பியுள்ளது தீண்டாமையின் உச்சமாக கருதப் படுகிறது. இந்த நவீனத்தீண்டாமையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வடசென்னை மாவட்டக் குழுவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவொற்றியூர்-எண்ணூர் பகுதிக்குழுவும் கண்டித்துள்ளது. மேலும் இந்த பிரச்சனை குறித்து  மே26 அன்று மாமன்ற உறுப்பினர் மார்க்சிஸ்ட் கட்சி வட சென்னை மாவட்ட  செயற்குழு உறுப்பினருமான ஆர்.ஜெயராமன்,  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வடசென்னை மாவட்டத் தலைவர் எம்.ராஜ்குமார், மாவட்டப் பொருளாளர் ஆனந்தன் மற்றும்  செம்மல், பார்த்தசாரதி ஆகி யோர் களஆய்வு நடத்தினர். சென்னை மாநகரில் தீண்டாமை யின் மறுவடிவமாக இந்த சம்பவத்தை பார்ப்பதாகவும் இதில் அரசு நிர்வாகம் உடனே தலையிட்டு மீனவ மக்களின் குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வெளியேற திட்டமிட்டபடி  இணைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். குழாய் பதிக்கவேண்டும் என்பதில் காவல்துறையும் மாநகராட்சி நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது வரவேற்க தக்கதுதான் என்றாலும் பிரச்சனை இழுத்தடிக்கப்படுமானால் மக்களை திரட்டி போராடுவதைத்தவிர வேறுவழியில்லை என தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

;