அருப்புக்கோட்டை, ஏப்.20- தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி என மொத்த முள்ள 40 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தனது மனைவி ஆதிலட்சுமியிடன் வரிசையில் நின்று வாக்களித் தார். பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில், ‘‘விருதுநகர் நாடாளு மன்ற தொகுதியில் பொது மக்கள் ஆர்வமுடன் வாக்களித்துள்ளனர். இந்த ஆர்வமானது, தமிழக முதலமைச்சரின் நல்லாட் சிக்கு அங்கீகாரமாக இருக்கும். ‘‘நாடும் நமதே நாற்பதும் நமதே’’ என்பதைப்போல 40 தொகுதி களிலும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிபெறும். இந்திய நாட்டின் பிரதமரை தமிழக முதலமைச்சர் தேர்ந்தெடுப்பார்’’ என தெரிவித்தார்.