districts

img

மெட்ரோ ரயில் பணிகள் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

சென்னை,மார்ச் 9- சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட கட்டுமான பணிகள் நடைபெறுவதால்  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை, ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது. அமைந்தகரை செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட், நெல்சன் மாணிக்கம் சாலை வழியை பயன்படுத்தலாம். ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் எம்ஜிஆர் சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் சென்று தங்களது பயணத்தை தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.