districts

img

மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை,அக்.27-  சென்னை நந்தனம் தேவர் சிலை அருகில் 12 மாடிகளுடன் பிரம்மாண்டமான மெட்ரோ ரயில்  தலைமை அலுவலகம் கட்டப் பட்டுள்ளது.  3.90 லட்சம் சதுர அடி பரப்பள வில் ரூ.365 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் சென்னை மெட்ரோ ரயில்களை  கண்காணிக்கவும் கட்டுப்படுத்த வும் அலுவலகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு நவீன தகவல் தொடர்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அலுவலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. தலைமை அலுவலக வளாகத்தில் மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்கான குடியி ருப்புகள் மற்றும் தனியார் வர்த்தக  நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கான கட்டிடமும் கட்டப் பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த  12 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தை ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின்  வியாழனன்று (அக்.27)  மாலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்த அலுவலக முகப்பில் மிகப்பெரிய மெட்ரோ ரயில் என்ஜினும் சென்னை யில் மெட்ரோ ரயில் தோண்ட பயன்படுத்தப்பட்ட ராட்சத துளையிடும் கருவியும் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 வழித்தடங்களில்  சுமார் 55 கி.மீ. தூரத்துக்கு தினசரி காலை 5 மணியில் இருந்து இரவு  11 மணி வரை 42 மெட்ரோ ரயில்கள்  இயக்கப்பட்டு வருகிறது.   சராசரியாக தினசரி 2.20 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். 15  பெண்கள் உள்பட 180 பேர் மெட்ரோ  ரயில் ஓட்டுநர்களாக பணியாற்றி வருகின்றனர்.

;