districts

img

மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை, பிப்.24- 200 வார்டுகளை கொண்ட விரிவாக்கப்பட்ட  சென்னை மாநகராட்சியில்  6 ஆண்டுகளுக்கு பிறகு மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு புதிய மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பதவி ஏற்க உள்ளனர். இத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி 176 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. அதனால் தி.மு.க.வைச் சேர்ந்தவர் மேயராக தேர்ந்தெடுக் கப்படவுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே மாமன்றத்தை புதுப்பி க்கும் பணி நடைபெற்றது. தற்போது பதவி ஏற்புக் கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின் றன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி கூறுகையில்,  மாமன்ற கூட்ட அரங்கை  புதுப்பிக்கும் பணி கடந்த 20 நாட்களாக இந்த பணி நடந்து முடிந்துள்ளது. மேயர், துணை மேயர் இருக்கைகள் புதுப்பிக் கப்பட்டுள்ளன.மின் விளக்குகள் அனைத்தும் நவீன மாக்கப்பட்டுள்ளது. அரங்கு பிரகாசமாக இருக்கும் வகையில் எல்.இ.டி. விளக்குகள் பொருத் தப்பட்டுள்ளன. பாரம்பரியம், பழமை மாறாமல் வர்ணம் பூசப்பட்டுள்ளன. மரப்பலகைகள் அனைத் தும் வார்னிஷ் மூலம் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இருக்கைகளும் பழுது பார்க்கப் பட்டுள்ளன.  கவுன்சிலர்கள் வருகிற 2-ந்தேதி காலை 10 மணி முதல் பதவியேற்பார்கள். ஒவ்வொரு கவுன்சிலர்களும் தனித்தனியாக பதவி ஏற்பார்கள். ஒவ்வொருவரும் உறுதி மொழியை வாசித்து பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள். இதற்காக வெற்றி பெற்றுள்ள 200 கவுன்சி லர்களுக்கும் பதவி ஏற்பதற்கான அழைப்பு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

புதிய மேயர்
புதிய மேயர் பதவி ஏற்பு விழா 4ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும். இதற்கான தேர்தல் நடைமுறைகள் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. போட்டியில்லாத பட்சத்தில் மேயராக தேர்வு செய்யப்படுகிறவருக்கு ஆணையர் என்ற முறையில் நான் பதவி பிரமாணம் செய்து வைப்பேன். புதிய மேயர் பதவி  ஏற்றவுடன் அவர் அவரது இருக்கையில் அமர வைக்கப்படுவார். புதிய மேயர் அமருவதற்கான இருக்கை மற்றும் அவர் அணியக்கூடிய அங்கி, செங்கோல் போன்றவை புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
துணைமேயர்
துணை மேயர் பதவி ஏற்பு விழா 4-ந்தேதி பகல் 2.30 மணிக்கு நடைபெறும். துணை மேயராக தேர்வு செய்யப்படுபவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டு பொறுப்பேற்பார். முதல் மாமன்ற கூட்டம் புதிய மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர்களுடன் கலந்து பேசி முதல் மாமன்ற கூட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றார் அவர்.

;