districts

img

பதவி ஏற்பு விழா

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மண்டலம் 23 ஜெசிஎஸ் 38 ஆவது ஆண்டு பதவி ஏற்பு விழா திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சாசன தலைவர் ஆர்கேபி விசுவநாதன் தலைமை வகித்தார். வணிகர் சங்க மண்டல தலைவர் எல். செந்தில்நாதன், திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கத் தலைவர் கே.எஸ்.செந்தில்குமார் முன்னிலை வகித்தார்கள். 2020 ஆம் ஆண்டு புதிய தலைவராக எடையூர் ஆர்.வி மணிமாறன், செயலாளராக ஆர். சாந்தி, பொருளாளராக ஜே.கிறிஸ்டோபர் உள்ளிட்ட 28 இயக்குனர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.