திருவள்ளூர், நவ 22- மடுக்கூர் முதல் ஆதிவராகபுரம் வரை தார்சாலை அமைக்க அரசின் அனு மதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததால் காத்தி ருக்கும் போராட்டம் முடிவிற்கு வந்தது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகில் அம்மனேரி, மடுகூர், ராசாநகரம் (மேற்கு), ஆகிய கிராமங்க ளில் 30 வருடங்களாக மலை புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது அரசு நிர்வாகம் ஒப்புக்கொண்டபடி பட்டா வழங்க வேண்டும், பல்வேறு வகையான அரசுப் புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும், அம்மனேரி, மடுக்கூர், ராமாபுரம், பாலா புரம் கிராம மக்களுக்கு ஏற்கெனவே வழங்கிய பட்டாக்களை கணினியில் பதி வேற்றம் செய்ய வேண்டும்,அம்மனேரி அங்கன்வாடி குழந்தைகளுக்கான கட்டிடத்தை கட்டிக் கொடுக்க வேண்டும், அம்மனேரி முதல் மடுக்கூர் வரை சாலையை செப்பனிட வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும்போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றிட வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதனன்று (நவ 22), ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்தி ருக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை தொடர்ந்து ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் விஜய குமார் தலைவர்களை அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையில்,மடுகூர் முதல் ஆதிவராகபுரம் வரை சாலை அமைக்க ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் 4.கி.மீ.தூரம் பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்க அரசின் அனுமதிக்காக கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. அனுமதி வந்தவுடன் சாலை அமைக்கப்படும். வீட்டுமனைப் பட்டாக்கள் ஒரு மாதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், 15 நாட்களில் கணினியில் பட்டாக்களை பதிவேற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. விவசாயிகள் சங்கத்தின் பகுதி செயலாளர் வை.குப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், மாவட்டப் பொருளாளர் சி.பெரு மாள், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், சிபிஎம் வட்டச் செயலாளர் சிவபிரசாத், சிஐடியு நிர்வாகி கே.ஜி.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.